“ கைலாயம் – சன்மார்க்க விளக்கம் “ – கணபதி சித்தர் – நெஞ்சறி விளக்கம் சிரமெனும் குகையின் உள்ளே சிவ கயிலாய மன்றில் அரனிடம் அமையும் வாசி ஆடல்தான் செய்வார் என்று பரமமெய் ஞான நூல்கள் பகர்வதை அறிந்து பார்த்து வரமிகு நாகை நாதர் மலரடி வணங்கு நெஞ்சே விளக்கம் : சிரத்தில் இருக்கும் கயிலாயம் எனும் பொது வெளியில் சிவம் ஆடல் செயும் ஆகையால் கைலாயம் இமய மலையில் இலை – நம் மண்டையினுள்…