போகர் 7000 அமுதம் உற்பத்தி செயும் முறைமை தேறியுமே துவாதசத்தில் ஏற்றம் பாரு திறமாக மூலத்தை இறுத்துக் கும்பி மாறியுமே இடையோடு பிங்கலை தானும் மாசற்ற முப்பாழில் குதிரை போட்டு சீறியுமே அதில் நின்று தீர்க்கமாகி சிற்றுரையாள் தன்பாதம் தன்னில் சொக்கி ஆறியே இளைப்பாறு சந்திரக் கோளில் அமிர்தத்தை உண்டுமேதான் அழுந்திடாயே விளக்கம் : மூலத்தில் சுவாச பந்தனம் செய்து , துவாத சாந்தப் பெருவெளியில் கவனம் வைத்திருப்பாயாக வாசியால் மூன்று வெளிகள் கடந்து சத்தி விளங்கும்…