உச்சி பெருமை – பெருந்துறை பெருமை ஸ்ரீ மாணிக்கவாசகப் பெருமான் அருளிய திருவாசகம் – எட்டாம் திருமுறை வாழாப்பத்து. பாவநா சாஉன் பாதமே யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் தேவர்தந் தேவே சிவபுரத் தரசே திருப்பெருந் துறையுறை சிவனே மூவுல குருவ இருவர்கீழ் மேலாய் முழங்கழ லாய்நிமிர்ந் தானே மாவுரி யானே வாழ்கிலேன் கண்டாய் வருகஎன் றருள்புரி யாயே விளக்கம் : வினையால் ஏற்பட்ட பாவத்தை நாசம் செய்பவனே உன் திருவடி தவிர வேறேதையும் நான் பற்றியிருக்கவிலை…