ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய தேவாரம் – ஏழாம் திருமுறை, திருநனிபள்ளி. ஆதியன் ஆதிரையன் அயன் மாலறி தற்கரிய சோதியன் சொற்பொருளாய்ச் சுருங் காமறை நான்கினையும் ஓதியன் உம்பர்தங்கோன் உல கத்தினுள் எவ்வுயிர்க்கும் நாதியன் நம்பெருமான் நண்ணும் ஊர்நனி பள்ளியதே பொருள் : பழமையானவன் தேவர்கள் பிரமாவும் விஷ்ணுவும் அறியா ஜோதிப்பிழம்பானவன் நான் மறையும் அருளியவன் தேவர்களுக்கு எலாம் தலைவன் உலகில் எல்லா உயிர்க்கும் உறவானவன் நனிபள்ளி உறை சிவனே அவன் வெங்கடேஷ்…