ஆன்மா பிரம்மம் பெருமை திருஞானசம்பந்தர் பெருமான் அருளிய தேவாரம் – முதலாம் திருமுறை, திரு அண்ணாமலை. உண்ணாமுலை யுமையாளொடும் உடனாகிய வொருவன் பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ மண்ணார்ந்தன வருவித்திரண் மழலைம்முழ வதிரும் அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே விளக்கம் : உண்ணாமுலை உடனுறை அண்ணாமலை அண்ணலை – பிரமத்துவாரம் விளங்கு பிரம்ம ம் ஆகிய ஆன்மாவை தொழுவார் தம் வினைகள் அறுமே ஆன்மாவுக்கு வினையில் இருந்து விடுதலை அளிக்கும் சக்தி ஆற்றல் உண்டு என அறிய…