பல் அண்டம் கோட்பாடு அருட்பெருஞ்சோதி அகவல் 292 சிருட்டித் தலைவரைச் சிருட்டியண் டங்களை அருட்டிறல் வகுத்த வருட்பெருஞ் ஜோதி 293. காவல்செய் தலைவரைக் காவலண் டங்களை ஆவகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி 294. அழித்தல்செய் தலைவரை யவரண் டங்களை அழுக்கற வமைத்த வருட்பெருஞ் ஜோதி 295. மறைத்திடு தலைவரை மற்றுமண் டங்களை அறத்தொடு வகுத்த வருட்பெருஞ் ஜோதி 296. தெளிவுசெய் தலைவரைத் திகழுமண் டங்களை அளிபெற வகுத்த வருட்பெருஞ் ஜோதி 297. விந்துவாஞ் சத்தியை விந்தினண் டங்களை…