திருமந்திரம் – அமுதம் விளைவிக்கும் முறை விந்துவென் வீசத்தை மேவிய மூலத்து நந்திய அங்கியி னாலே நயந்தெரித்து தந்தமில் பானு அதிகண்ட மேலேற்றி சந்திரன் சார்புறத் தண்ணமு தாமே கருத்து : விந்துவை இரு புருவ மத்தியாம் மூலத்துக்கு மேலேற்றி , அங்கு அக்கினியால் எரித்து , மீண்டும் சுழிமுனையில் இருக்கும் சந்திர மண்டலத்துக்கு மேலேற்றினால் , மிகக் குளிர்ச்சியான அமுதம் விளையும் வெங்கடேஷ்…