திருமந்திரம் – சுத்த சிவத்தின் நிலை நின்றான் நிலமுழு தண்டமும் மேலுற வன்றாள் அசுரர் அமரரும் உய்ந்திடப் பின்றான் உலகம் படைத்தவன் பேர்னந்தி தன்றா ளிணையென் தலைமிசை யானதே கருத்து : சுத்த சிவம் பூமியிலும் வானிலும் எங்கும் கலந்து நிற்கின்றான் அவன் திருவடியால் அசுரரும் தேவர்களும் உய்கின்றார்கள் இந்த உலகை படைத்தவன் நந்தி ஆவான் அவன் கழலிணைகள் என்சிரம் மீது இருக்கின்றதே அவன் கழலிணைகள் என் சிரத்தினுள்ளே திருச்சிற்றம்பலத்தினுள் உள்ளது என்கிறார் வெங்கடேஷ்…